தானியங்கி நீர் பாசன கருவியில் புதிதாக வயர்லெஸ் மூலம் வால்வை கட்டுப்படுத்தும்

நுண்ணீர்ப் பாசனம் அல்லது  சொட்டு நீர்ப் பாசனம் (Drip irrigation system) என்பது  விவசாயத்திற்கு என்று கொண்டு வரப்பட்ட ஒரு அருமயான திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயணடைந்துள்ளனர்.

இருப்பினும் அதில் சில சிக்கல்கள் உள்ளன, அவை என்னவென்றால் :

* அனைத்து மரத்திற்கும் சமமான அளவில் தண்ணீர் கிடைக்க வேண்டும், ஆனால் அப்படி கிடைப்பதில்லை

* வெளியே சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லும் பட்சத்தில் முறையாக பாசனம் செய்வதில் சிரமம் 

* நமக்கு தேவைப்படும் நேரத்தில் நீர்ப் பாய்ச்ச ஆட்கள் கிடைப்பதில்லை

* குறைந்த அளவே தண்ணீர் இருக்கும் பட்சத்தில் சமமாக தண்ணீர் அளிப்பதில் சிரமம்

* மேலும் சமஅளவில் தண்ணீர் கிடைக்காமல் உற்பத்தி குறைவு என பல சிரமங்கள் இருக்கிறது.

அதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உதவும் வகையில் எங்கள்நயாகரா நிறுவனம் ஏற்கனவே இருந்த தானியங்கி சொட்டு நீர் பாசன (Automatic Drip irrigation) கருவியில் புதிதாக வயர்லெஸ் மூலம் வால்வை கட்டுப்படுத்தும்  (Smart Wireless Valve Controller) சிறு  புதுப்பிப்பை கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கருவி மூலம் நாம் எவ்வாறு  பயன் அடையலாம் என்பதை பார்ப்போம்:

~ முதலில் மோட்டார் அறையில் தானியங்கி கருவியை பொருத்த வேண்டும்.

~ பிறகு உங்களிடம் உள்ள சாதாரண வால்விற்கு பதில் வயர்லெஸ் வால்வை பொருந்த வேண்டும்.

 ~ ஒவ்வொரு வயர்லெஸ் வால்வையும் தானியங்கி கருவியுடன் இணைக்க வேண்டும்

~ இந்த தானியங்கி கருவியில் 3 விருப்பத்தேர்வுகள் உள்ளது அவை,  நாமாக  இயக்குவது(Manual) , தானாகவே இயங்கும் முறை(Automatic) மற்றொன்று மொபைல் செயலி(App) மூலம் இயக்குவது.

~ தானியங்கி கருவியில் ஏதேனும் ஒரு சிம் கார்டு ஒன்றை இணைக்க வேண்டும்.

~ நமது நயாகரா நிறுவனம் இதற்கென்று உருவாக்கியுள்ள செயலி மூலம் நாம் இதை இருக்கும் இடத்தில் இருந்து கட்டுப்படுத்தலாம்.

~ இதன் மூலம் அனைத்து மரத்திற்கும் சமமான அளவில் தண்ணீர் கிடைக்கும்

~ தனியாக வேலைக்கு ஆட்கள் தேவையில்லை

~ நாம் விரும்பும் நேரத்தில் பாசனம் செய்யலாம்

~ குறைந்த அளவு தண்ணீரே பயன்படுத்தப்படும்.

~ மொபைல் செயலி மூலம் ஒரு வால்விலிருந்து மற்ற வால்விற்கு தண்ணீர் மாற்றலாம்

~ இந்த செயலி மூலம் எந்த இடத்தில் பாசனம் செய்ய வேண்டும், எவ்வளவு தண்ணீர் இருப்பு உள்ளது, நீரோட்டத்தின் அழுத்தம் என்ன, எப்பொழுதும் மோட்டாரை அனைக்க வேண்டும் என அனைத்தையும் நமக்கு ஏற்றவாறு அமைத்து கொள்ளலாம்.

~ குறைந்த செலவில் உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

Leave Your Reply

Your email address will not be published.

*