ஈரோடு மாவட்டதை சேர்ந்தவர் கைலாஷ். இவர் சுமார் 18 வருடங்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் மென்பொருள் பொறியாளராக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் பணி செய்து வந்தார். இந்த நிலையில் தனது சொந்த ஊரில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் தொழில்நுட்ப பணியை துறந்து விட்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி முத்தையன் வலசு தொந்தளம் பகுதியில் சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு 10 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். இவரது நிலப் பகுதியானது மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை கீழ்பவானி நீர் பாசன திட்டத்தின் மூலம் பாசன வசதி பெறுகிறது. இவருடைய தோட்டத்தில் பெருவாரியாக தென்னை தான் பயிர் செய்யப்பட்டுள்ளது. நீர் பாசனம் பெறக்கூடிய அந்த குறிப்பிட்ட ஆறு மாதங்களில் இவர் கடலை மஞ்சள் நெல் போன்ற பயிர்களை பயிர் செய்து வருகிறார். எஞ்சிய ஆறு மாதங்கள் நிலத்தில் எந்தவித விவசாயம் செய்யாமல் தரிசாக கிடைப்பதாக வேதனை அடைந்துள்ளார். இவருடைய தோட்டமானது ஈரோட்டில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மீதமுள்ள ஆறு மாதங்கள் ஈரோடு பகுதியிலிருந்து தினமும் வந்து செல்வது என்பது மிகுந்த சிரமத்தை கொடுத்த நிலையில் விவசாயத்தை மேலும் எளிமையாக்கவும் இருக்கக்கூடிய நீரை மிச்சம் செய்து 12 மாதங்களும் தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இவர் என்ன செய்வது என்று யோசித்து வந்தார். இந்த நிலையில் சமூக வலைதளங்கள் வழியாகவும் கோவை மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற விவசாய கண்காட்சி வழியாகவும் நமது நயாகரா நிறுவனத்தை பற்றி தெரிந்து கொண்டு நம்மை அணுகினார். தன்னுடைய பிரச்சினைகளை நம்மிடம் முன் வைத்தார். நம்முடைய பொறியியல் வல்லுநர்கள் அவருடைய நிலப்பகுதியை ஆய்வு செய்து அவருடைய 10 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தகுந்தவாறு மொத்தம் 10 ஆட்டோமேட்டிக் கேட்வால்வுகள் பொருத்தலாம் என்று பரிந்துரை செய்தோம். இந்த கேட் வால்வுகளின் மூலம் நடைபெறும் நீர் பாசனத்தை நம்மிடம் உள்ள மொபைல் போன் மூலமாகவே நாம் கண்காணித்துக் கொள்ளவும் அதனை இயக்கவும் முடியும் என்று அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தோம். அதன்படி அவருடைய தோட்டத்தில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு போன்றவற்றை உள்ளடக்கிய வகையில் மொத்தம் பத்து தானியங்கி கேட் வால்வுகளை அவருடைய தோட்டத்தில் அமைத்துக் கொடுத்துள்ளோம். இதன் மூலம் இவர் சுமார் ஆறு மாதங்கள் வீட்டில் இருந்தபடியே விவசாயத்தை எளிமையான முறையில் மேற்கொள்கிறார். இருந்த இடத்திலிருந்து தன்னுடைய தோட்டத்தில் நீர் பாசன நிலைமையை வெகு எளிதாக கண்காணித்துக் கொள்கிறார். இதன் வழியாக ஆள் பற்றாக்குறையை சமாளித்ததாகவும் தற்போது உள்ள கூலி உயர்வு பிரச்சனையை வெகு எளிதாக கையாண்டதாகவும் நம்முடன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனால் மரங்கள் முன்பு இருந்ததை விட தற்பொழுது நல்ல மகசூல் தருவதாகவும் சரியான நேரத்தில் நீர் பாய்வதால் மரங்கள் செழுமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேவையான நீர் மட்டுமே தென்னை மரங்களுக்கு செல்வதால் மீதமாக கூடிய நீரை, 6 மாதங்கள் மட்டுமே செய்து வந்த கடலை மற்றும் பிற வேளாண் உற்பத்தியை மற்ற மாதங்களிலும் தன்னால் மேற்கொள்ள முடிவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய தோட்டத்திலும் இதைப் போல தானியங்கி கேட் வால்வுகளை பொருத்த விரும்பினால் நம்முடைய நயாகரா நிறுவனத்தை அணுகுங்கள். https://wa.me/919842505100?text=Hello…
விவசாய பெருமக்கள் இதைப் போன்றே தானியங்கி கேட் வால்வுகளை தங்கள் தோட்டத்தில் அமைக்க விரும்பினால் எங்களுடைய நயாகரா நிறுவனத்தை அணுகுங்கள்.
Niagara Solutions, A leading irrigation automation systems and product manufacturer and Supplier. Our products include Drip irrigation automation systems, water management systems for Domestic, Industrial, and Agriculture.
Contact us : Niagara solutions SF No: 225/1, VRS Nagar, Cheran Maanagar, Vilankuruchi Coimbatore-641035
Email: infoniagarasolutions@gmail.com
PH : +91 9843235100, 9842505100 infoniagarasolutions@gmail.com www.niagarairrigationautomation.com
For Dealer Inquiry & Support : +91 9069251000 Toll-free: 1800 313 7100 7373713400
Rajkumar – Area Manager.