“விவசாயத்திற்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தானியங்கி சொட்டுநீர் மற்றும் ஸ்மார்ட் நீர்பாசன தொழில்நுட்பம்”
Our Services
“இணையதளம் மூலம் இயக்க கூடிய நவீன சொட்டு நீர்பாசன தொழில்நுட்பம்” Our Services

நயாகரா தங்களை வரவேற்கின்றது

நயாகரா நிறுவனம், ஒரு முன்னணி நீர்ப்பாசன ஆட்டோமேஷன் அமைப்புகள் மற்றும் தயாரிப்பு உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்.எங்கள் தயாரிப்புகள் சொட்டு நீர்ப்பாசன ஆட்டோமேஷன் அமைப்புகள், உள்நாட்டு, தொழில்துறை மற்றும் விவசாயத்திற்கான நீர் மேலாண்மை அமைப்புகள் ஆகியவை அடங்கும்.

தானியங்கி நீர்ப்பாசன அமைப்பு

தானியங்கி நீர்ப்பாசன அமைப்பு(Irrigation automation system) என்பது தனிப்பட்ட துறைகளில் மூலத்திலிருந்து நீர் பயன்பாட்டிற்கு தண்ணீரை வழங்கும் ஒரு பல்நோக்கு அமைப்பு ஆகும். கண்காணிப்பு தவிர மற்றவைர்களுக்கு குறைந்த அளவு மனிதர்களின் தலையீடு அல்லது மனிதர்களின் தலையீடு இல்லாமல் இந்த அமைப்பின் செயல்படக்கூடியது. .கா. நீங்கள் உங்கள் அலுவலகத்திலோ, வீட்டிலோ அல்லது தொலைதூர இடத்திலிருந்தே தானியங்கி மொபைல் பம்ப்பை கட்டுப்படுத்தி(Automatic Mobile Pump Controller) அதை ஆன்ஆஃப்செய்ய உதவுகிறது.

சொட்டு நீர்ப்பாசனம்

சொட்டு நீர் பாசனம் என்பது நீர் மற்றும் உரத்தை சேமிக்கும் ஒரு வடிவமாகும், இது நீரைப் பல தாவரங்களின் வேர்களுக்கு சொட்டு சொட்டாக மெதுவான முறையில், மண்ணின் மேற்பரப்பில் அல்லது நேரடியாக அடித்தள மண்டலத்திற்கு, வால்வுகள், குழாய்கள் மற்றும் உமிழ்ப்பான்களின்(emitters) இணைப்பு மூலம் பாசனம் செய்வது. இது விவசாயிகளுக்கு தங்கள் பண்ணைகளை இயக்குவதற்கு ஒரு திறமையான மற்றும் எளிய வழியை வழங்குகிறது, மேலும் தண்ணீரை சேமிக்கிறது, இந்த அமைப்பின் மூலம் நீர் ஆவியாதல் மிகவும் குறைகிறது.

ஸ்மார்ட் நீர்ப்பாசன அமைப்பு

ஸ்மார்ட்(Smart) நீர்ப்பாசன அமைப்பு மூலம் குறிப்பிட்ட நிலப்பரப்பு தேவைகளை பூர்த்தி செய்ய தானாகவே தண்ணீர் விடும் அட்டவணைகள் மற்றும் இயங்கும் நேரங்களை நாம் அமைத்து கொள்ளலாம். இந்த அமைப்பின் மூலம் வெளிப்புற நீரின் பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படும், நீர் வீணாவதை தடுக்க முடியும். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அட்டவணை மற்றும் நேரத்தின் அடிப்படையில் இயங்கும், ஸ்மார்ட் நீர்ப்பாசன கட்டுப்பாட்டு கருவி வானிலை, மண் நிலைமைகள், ஆவியாதல் மற்றும் தாவர நீர் பயன்பாடு ஆகியவற்றை கண்காணிக்கிறது.

விருது பெற்ற நிறுவனம்

வீட்டில் ஆர் & டி பிரிவில், பயணர் பயன்படுத்த எளிதான மற்றும் திடமான விருது வென்ற தயாரிப்புகளை உருவாக்குகிறோம்.

15 ஆண்டு அனுபவம்

தானியங்கி நீர்ப்பாசன அமைப்பில் 15 ஆண்டுகள் அனுபவத்துடன், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை வழங்குகிறோம்.

10000+ வெற்றிகரமான திட்டங்கள்

இந்தியா முழுவதும் 10000 க்கும் மேற்பட்ட திட்டங்களில் எங்கள் சாதனங்களை வெற்றிகரமாக நிறுவி உள்ளோம்.

எங்கள் தயாரிப்புகள்

டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவர்

டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவர்(Transmitter and Receiver) வடிவமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், வயர்லெஸ் மெசேஜிங் மற்றும் குரல் கட்டுப்பாட்டு விருப்பத்தேர்வு மூலம் தானியங்கி நீர்ப்பாசன கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பை இருக்கும் இடத்தில் இருந்து கட்டுப்படுத்துவதற்கே ஆகும். எங்கள் நோக்கமானது தண்ணீர் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதிய செலவை குறைக்க வேண்டும், மற்றும் பாதுகாப்பு வழங்குவதற்கு, இது திறமையாக மற்றும் திறம்பட மகசூல் மேம்படுத்துகிறது.

இணையதளத் தானியங்கி நீர்ப்பாசனம்

இணையதளம் மூலம் இயங்கும் கருவிகளை அடிப்படையாக கொ‌ண்டது இந்த ஸ்மார்ட் விவசாயம். ஒளி, ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் மண் ஈரப்பதம் போன்ற சென்சார்களின் உதவியுடன் பயிர் நிலங்களை கண்காணிப்பதற்காக இவை உருவாக்கப்பட்டது. இணையதளம் உதவியுடன் விவசாயிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் பயிரின் நிலைமைகளை கண்காணிக்க முடியும். உற்பத்தி, தரம் மற்றும் அளவு மகசூல் இடையே உள்ள இடைவெளியை குறைக்க இணையதளம் உதவுகிறது.

நீர் மட்டம் கண்காணிப்பு

நீர் மட்டம் கண்காணிப்பு(Water Level Monitor) கருவியை கொண்டு, ஒரு மேல்நிலைத் தொட்டியில் அல்லது வேறு ஏதேனும் நீர் தேங்கி வைக்கும் இடத்தில் உள்ள நீரின் அளவைக் கண்டறிந்து, குறிப்பிடுவதற்கான ஒரு எளிய வழிமுறையாக இது பயன்படுத்துகிறது, அது மட்டுமின்றி, நீரின் அளவு அதிகமாக உள்ளதா அல்லது நீர் மட்டம் குறைந்து உள்ளதா என்பதையும் மற்றும் மோட்டார் எவ்வாறு செயல்படுகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறது மற்றும் மின்சார நுகர்வை குறைக்க உதவுகிறது. நீர் மற்றும் மின்சாரத்தை சேமிக்கிறது.

உரக் கட்டுப்பாட்டு கருவி

ஸ்மார்ட் உரகட்டுப்பாட்டு கருவியின்(Fertilizer Controllers) வேளை என்னவென்றால், உரம் கலக்கப்பட்ட பாசன நீரை வெளிப்புற சூழலில் இருந்து தனித்து வைத்திருக்க உதவுகிறது, அதற்காக நீர் பின்னோக்கி செல்லாமல் இருக்க தடுப்பு சாதனங்கள் (Backflow Prevention Devices) , இரசாயன கசிவு தட்டுகள் (Chemical Spill Trays) மற்றும் சுற்றியுள்ள தரையில் நேரடியாக படாமல் பார்த்துக் கொள்ளவது (Physical Separation from Surrounding Ground) என இவைகள் பயன்படுத்தப்படுகிறது, இது அதிகப்படியான இரசாயனங்கள் அமைப்புகளிலிருந்து வெளியேறும் அபாயத்தை கணிசமாககுறைக்கிறது.

வால்வ் கட்டுப்பாட்டு கருவி

இணையதளம் மூலம் இயங்கும் கருவிகளை அடிப்படையாக கொ‌ண்டது இந்த ஸ்மார்ட் விவசாயம். ஒளி, ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் மண் ஈரப்பதம் போன்ற சென்சார்களின் உதவியுடன் பயிர் நிலங்களை கண்காணிப்பதற்காக இவை உருவாக்கப்பட்டது. இணையதளம் உதவியுடன் விவசாயிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் பயிரின் நிலைமைகளை கண்காணிக்க முடியும். உற்பத்தி, தரம் மற்றும் அளவு மகசூல் இடையே உள்ள இடைவெளியை குறைக்க இணையதளம் உதவுகிறது.

நீர் வடிப்பான்கள்

விவசாயிகள் எங்கிருந்தும் வேணாலும் தங்கள் பயிரின் நிலைமைகளை கண்காணிக்க முடியும். வழக்கமான அணுகுமுறையுடன் ஒப்பிடுகையில் இணையதளம் மூலம் இயங்கும் கருவிகளை அடிப்படையாக கொ‌ண்டது இந்த ஸ்மார்ட் விவசாயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஒளி, ஈரப்பதம், மண்ணின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையைக் கண்காணிக்க உதவுகிறது. இவை பெரிய அளவில் விவசாயம் செய்பவர்களை மட்டும் கவரும் இலக்காக இல்லாமல், இயற்கை மற்றும் சிறிய அளவு விவசாயிகளுக்கு பயன் தருமாறும் வடிவமைத்துள்ளோம்.

அழுத்தம் உணரும் கருவி

அழுத்தம் உணர்தல் தொழில்நுட்பத்தை கொண்டு விவசாயத்தில் சுற்றுச்சூழலில் ஏற்படும் அழுத்தம் பற்றி கண்காணிக்க பயன்படுத்தப்படுகிறது, ஒரு அடிப்படையான அழுத்தம் உணர்தல் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் அமைப்பு மிக எளிமையானது, நம்பகமானது, பொருளாதாரமானது, விரிவாக்கக்கூடியது, மேலும் ஒரு பெரிய விவசாய பயன்பாட்டு மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் தேவைகளை மிகவும் திருப்திப்படுத்துகிறது.

நீர்ப்பாசன கட்டுப்பாட்டு தகடு

நீர்ப்பாசன கட்டுப்பாட்டுப் பலகைகள் நீர் மற்றும் மின்சாரத்தை சேமிக்க உதவுகின்றது, அதுமட்டுமின்றி ஒவ்வொரு நீர்ப்பாசன செயல்முறையையும் தானியங்கி கருவி மூலம் எளிதாக  செய்ய உதவும். பண்ணைகள் மற்றும் விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு சொட்டு நீரும் அவர்களுக்கு கிடைக்கும் படியும் மற்றும் பிற கருவிகளும் நாங்கள் அமைத்து தருகிறோம். எமது வாடிக்கையாளர் தேவைகளின் அடிப்படையில் பலதரப்பட்ட நீர்ப்பாசன கட்டுப்பாட்டுப் கருவிகள் வழங்குகிறோம்.

தேவையான துணைப்பொருள்கள்

கிட்டத்தட்ட அனைத்து தானியங்கி நீர்ப்பாசன கருவிகளுக்கும் அதில் இருக்கும் நீரை வடிகட்டுதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றுஉரிய நேரத்தில் தாமாக சுத்தம் செய்து கொள்ளும் வடிகட்டிகள் கருவியின் ஆயுளை நீட்டிப்பதோடு மட்டுமில்லாமல் எவ்வகையான பாசன அமைப்பின் பராமரிப்பாக இருந்தாலும் அதை மேம்படுத்தவும் உதவி செய்கிறது. சொட்டு நீர்ப்பாசனம் அல்லது மைக்ரோ தெளிப்பு உமிழ்ப்பான்கள் (Micro-sprinkler Emitters) எதுவாக இருந்தாலும் அடைப்புகளைத் தவிர்க்க வடிகட்டிகள் ஒரு அடிப்படை தேவையாகும்.

எங்கள் நிறுவனம் பற்றி

Untitled design (4)
Untitled design (5)

நயாகரா சொல்யூஷன்ஸ் 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரை தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நிறுவனமாக நாங்கள் இருக்கிறோம்.

நாங்கள் உற்பத்தி, கருவிகளை மொத்தமாக விற்பனை செய்தல், மற்றும் நீர் மட்ட கட்டுப்படுத்தும் கருவி, நீர் விசைக்குழாய் கட்டுப்படுத்தும் கருவி, மொபைல் ஸ்டார்டர் மற்றும் பல வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள ஒரே உரிமையாளர் அடிப்படையிலான நிறுவனம் எங்களுடையது. எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் உள்நாட்டு, தொழில்துறை மற்றும் விவசாய துறைகளுக்கு ஒரு முழுமையான நீர் மேலாண்மையை கட்டுப்படுத்தும் தானியங்கி கருவிகளை வழங்குவதாகும்.